முன்னதாக திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் செயலாளர். தர்மேந்திரன் பங்கேற்றனர்.
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு துறை ஊழியர்கள், பயனாளிகள் என திரளாக கலந்துக்கொண்டனர். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 17.33 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் வேலு கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து மகளிர் மன்றங்களுக்கும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டது.
பொதுமக்களின் வசதிக்காகவும், விவசாயிகளின் வசதிக்காகவும் தான் இந்த கூட்டுறவு சங்கங்களை கலைஞர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. தான் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த காலத்தில் தான் கூட்டுறவு சங்கங்களில் இருந்த கடன்களை தள்ளுபடி செய்தோம் என்றார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment