இந்த நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் தலைமையில் நடைப்பெற்றது, இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மங்கல இசை விநாயகர் பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் பஞ்ச சுக்த பாராயணம் மகாலட்சுமி ஓமம் திரவிய ஹீதி, நாடி சந்தானம் மகாதீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து யாத்ரா தானம் திரவ கலசங்கள் புறப்பாடு ஆலய கோபுர கலச கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவர் பரிவாத தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அலங்காரம் கோதரி தரிசனம் தசதானம் மகாதீபாராதனை பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் அதிவிமரிசையாக நடைபெற்றது.
பூஜைகள் நடைபெற்று குடங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பொதுமக்கள் அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைவரும் ஓம்சக்தி பராசக்தி என்று கோசம் எழுப்பினர், பொதுமக்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment