திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் (BLA-2) மற்றும் பாக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோகனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் திரு A நல்லதம்பி MLA அவர்கள் ஏற்பாட்டில், ஒன்றிய அவைத்தலைவர் திரு C சின்னதம்பி அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் TND அருண் மஹாலில் நடைபெற்றது. திமுக முன்னோடிகள், நிர்வாகிகள் ஆகியோர் வழங்கிய ஆலோசனைக்கு பிறகு இறுதியாக திரு A நல்லதம்பி MLA சிறப்புறையாற்றினார்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் மாதம் சேலம் மாநகரில் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் திரளாக அனைவரும் கலந்து கொள்வதென இக்கூட்டம் தீர்மானிகின்றது.
- இல்லம் தோறும் திமுக இளைஞர் அணி பாகம் வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து இளைஞரணியை பலப்படுந்த இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
- வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் நீக்கல், திருத்தம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்தால் வரும் 04,05 - 11-2025 மற்றும் 18,19-11-2023 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கிறது. திமுக தலைமை கழகம் அறிவித்தப்படி முகாம்கள் இருக்கும் நாட்களில் வாக்குச்சாவடி பாகமுகவர்கள் (BLA-2) பாக இளைஞர் அணி பொறுபாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அக்கறையோடு இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
- திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள நீட்-க்கு (#BANNEET) எதிரான கையெழுத்து இயக்கத்தை ஊராட்சிகள் தோறும் மக்களிடையே சென்று IT WING, இளைஞரணி மாணவரணி மற்றும் அனைத்து அணிகளும் நீட்-க்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை முன்னெடுபதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
- திமுக ஆணையிடும் அனைத்து பணிகளில் கழகத்தின் வளர்ச்சிக்கான நோக்கத்தில் நிறைவேற்ற அனைவரும் பாடுபடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல்,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர் தசரதன், ஒன்றிய பெருந்தலைவர் திருமதி விஜயா அருணாச்சலம்,துணைத் தலைவர் டி ஆர் ஞானசேகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் கழகரசு, டி கே சின்னத்தம்பி, ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், சிவலிங்கம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆதித்யா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் ஒன்றிய மாணவரணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், BLA-2 பாக முகவர்கள் மற்றும் பாக இளைஞரணி பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment