நடப்போம் நலம் பெறுவோம் - நடைப்பயிற்சியை தொடங்கிவைத்தார் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2023

நடப்போம் நலம் பெறுவோம் - நடைப்பயிற்சியை தொடங்கிவைத்தார் மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் - நடைப்பயிற்ச்சியை காணொளி காட்சி மூலம்  விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார், நடைப்பயிற்சியின் முக்கிய துவத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும் அனைவரும் நொயற்ற வாழவும், ஆரோககியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருப்பத்தூர் மாவட்ட  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம்  - நடைப்பயிற்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதனை காணொளி காட்சி வாயிலாக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபயிற்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நடை பயிற்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பாச்சல் வழியாக அச்சமங்கலம் பகுதி வரை சென்று 8 கிலோமீட்டர் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர் 


இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்,  சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில், திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் சிவக்குமார், அலங்காயம் மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் சமூக ஆர்வலர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/