திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் ஊராட்சி கிராம சபா கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - தலைவரை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி சந்திரசேகர் தர்ணா போராட்டம் - பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 November 2023

திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் ஊராட்சி கிராம சபா கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - தலைவரை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி சந்திரசேகர் தர்ணா போராட்டம் - பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், உடையாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக வில்வநாதன் உள்ளார். ஒன்றிய கவுன்சிலராக லட்சுமி சந்திரசேகர் பணியாற்றி வருகிறார். இன்று கிராம சபா கூட்டம் நடத்த தமிழக அரசுஅறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் உடையாமுத்தூர் ஊராட்சியின் கிராம சபா கூட்டம் கவுண்டச்சியூர் கிராமத்தில் நடைப்பெற்றது. 

கிராம சபா கூட்டம் நடத்த நோட்டீஸ் கள் அச்சடிக்கப்பட்டது. ஆனால் அதில் கவுன்சிலர் லட்சுமியின் பெயர் இல்லாததால் கூட்டத்தில் லட்சுமி கேட்டுள்ளார்.  ஏற்கெனவே ஊராட்சியில் நடைபெற்ற கட்டிடங்களில் தனது பெயரை நிராகரிக்கிறார் கள்.  தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எந்த தகவலும் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். 


ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன்,  கவுன்சிலர் லட்சுமியையும் அவரது கணவர் சந்திரசேகரையும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியதாக கூறப்படுகிறது. கவுன்சிலர் லட்சுமியை அடிக்க முயன்றதாக கூறி  கவுன்சிலர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றார். எங்களை தொடர்ந்து ஒதுக்கி வைத்தால் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/