திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீட்-க்கு எதிராக தனது கையெழுத்து இட்டு, நீட்-க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் வி.வி.கிரிராஜ், ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பழனி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக், கிளைச்செயலாளர்கள் பார்த்திபன், ஆப்பிள், அசோகன், சரவணன், மகேந்திரன், பாரதி மற்றும் முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment