கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது . - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 November 2023

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .


திருப்பத்தூர் மாவட்டம் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது, வருங்கால தலைமுறையினரை போதைப் பொருள் இல்லாத சமூகமாக மாற்ற தற்போது போதைப் பொருள் ஒழிக்கப்பட‌வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். 

திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். 


மேலும் தங்கள் பகுதிகளில் எவரேனும் போதைப்பொருள் விநியோகித்தாலோ அல்லது உபயோகப்படுத்தினாலோ காவல்துறைக்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்போர் குறித்த விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். 


மேலும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், வருவாய் கோட்டாட்சியர் பானு, கலால் துறை உதவி ஆணையர் ஜோதிவேல் மற்றும் பலர் பங்கு பெற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/