திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு ஒரு பகுதியாக 18 வயதுடைய இளம் வாக்காளர் பதிவு செய்யும் நிகழ்வுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர் களுக்கு பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்வது உள்ளிட்டவைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மற்றும் ஒவ்வொருவரும் வாக்களிப்பது நமது தலையாய கடமையாகும். ஒரு தலைசிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தின் கடமையாகும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி. வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment