கசினாயக்கான்பட்டி கிராமத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில்நடைபெற்றது! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 November 2023

கசினாயக்கான்பட்டி கிராமத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில்நடைபெற்றது!


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட தொடக்க விழாவானது  மாவட்ட ஆட்சித் தலைவர்  பாஸ்கர  தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கூறுகையில், புற்றுநோய் கண்டறியும் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம் ஒவ்வொரு பெண்களும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்  கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்களை வாங்வேண்டாம், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளில் தேனீர் அருந்தவேண்டாம் குப்பை கழிவுகளை தீயிட்டு கொழுத்தவேண்டாம் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்று கூறினார்.


நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும்  ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் சிறப்புரை நிகழ்த்தினர், மாவட்ட  மருத்துவ அலுவலர் செந்தில், KSA. மோகன்ராஜ், K.A. குணசேகரன், மற்றும் துணை சேர்மன் மோகன்குமார், மருத்துவ அலுவலர்கள், மருத்துவவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/