நாங்கள் உண்மையான குருமன்ஸ் இனத்தவர் எனக்கூறி தலை மீது தேங்காய் உடைத்து தர்ணா போரட்டம்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 November 2023

நாங்கள் உண்மையான குருமன்ஸ் இனத்தவர் எனக்கூறி தலை மீது தேங்காய் உடைத்து தர்ணா போரட்டம்!


திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாங்கள் உண்மையான குருமன்ஸ் இனத்தவர் எனக்கூறி தலை மீது தேங்காய் உடைத்து காண்பித்து குருமான்ஸ் பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க கோரி தர்ணா போரட்டம்!.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவரும் அருள் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும்மான டில்லி பாபு தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் மட்டும் இன்றி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி தரும போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் நாங்கள் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் தான் என்பதற்கு சான்றாக சேவாட்டம் ஆடியும், அருள் கொண்டவர் மீது தேங்காய் உடைத்து  சாமியை வழிபடும் நிகழ்வையும் நிகழ்த்தி காட்டினார்.


மேலும் 2014 முதல் 2016 வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் வழங்கிய குறுமன்ஸ் பழங்குடி இனச் சான்றிதழ்களை ரத்து செய்ய சட்ட விரோத முறையில் வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி பெற்றோருக்கு இனச்சான்றிதழ் இருந்தால் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் மேலும் குருமன்ஸ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/