திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2023

திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், விசமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி  தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்து கொண்டார், முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி அனைவரையும் வரவேற்றார்.  இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம்,  குழந்தைகள் நலன்,  மகப்பேறு பரிசோதனை,  ஸ்கேன் பிரிவு,  பல் பிரிவு மற்றும் பொது மருத்துவம் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம்,  சக்கரை நோய் கண்டறிதல், ரத்தத்தின் கொழுப்பின் அளவு மற்றும் பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது, முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 


இந்த மருத்துவ முகாமில் ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா வினோத்குமார், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் செந்தில், குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா மற்றும் பேராம்பட்டு மருத்துவ அலுவலர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்  500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/