திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல் சிறப்பு முகாம்நடைபெற்று வருகின்றது, இந்த முகாமினை தமிழ்நாடு சிறப்பு தொழில் வளர்ச்சி கழகம் நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டிலுக்கான பார்வையாளர் மதுமதி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார்.
இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றுவரும் முகாமினை ஆய்வு செய்தார், பின்னர் ஜோலார்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கோட்டாட்சியர் பானு மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment