சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு டி.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், எஸ்.தாமோதிரன், சங்கிதாபாரி, வீ.வடிவேல், தே.பிரபாகரன், எஸ்.பழனி, ப்ரித்தாபழனி, ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன், வி.எஸ்.கார்த்திக், பார்த்திபன், ஆப்பிள், அசோகன், சரவணன், மகேந்திரன், பாரதி மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment