திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நவாஸ் பாஷா (39) இவரது மனைவி ஹீனா பேகம்(31). இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக தனது தாய் வீடான திருப்பத்தூர் எஸ்.என் நகரில் வசித்து வந்துள்ளார். தனது சகோதரரான அய்யூப் (40) இடம் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 27 ம் தேதி சென்றுள்ளார். அங்கு பணிக்கு சென்ற பிறகு தன்னை சித்தரவதை செய்வதாகவும், தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. தான் சொந்த ஊருக்கு வந்து விடுவதாகவும் தனது கணவர் நவாஸ் பாஷாவிடம் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஹீனாபேகத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். சொந்த ஊர் வந்தவர் காவல் நிலையம் வந்து காவல் துறைக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது கணவருடன் சென்றார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment