திருப்பத்தூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு நடத்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். தமிழ்நாடு உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத் திறனாளிகாக செயல்பட்டு வருகிறது. திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளை மும், கணக்கெடுப்பு மேற்கொண்டு சமூகத்தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 29.11.23 முதல் 31.12.23 வரை கணக்கு எடுப்பு பணி நடைபெற உள்ளது மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணிக்காக அவர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்க உள்ளார்கள். கணக்கெடுப்பில் கலந்து கொள்வதின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சமூக தரவு பதிவு பண்ணி மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு நல்ல அரிய வாய்ப்பு.
மேலும் விவரங்கள் தயாரிப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன்(பொறுப்பு) முடநீக்கு வல்லுனர் இனியன், மாவட்ட சமூக திட்ட அலுவலர் புருஷோத்தமன், மகளிர் திட்ட உதவி இயக்குனர் வீராசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment