பொதுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.7.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது
மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் 23.9.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் பயன்பெறலாம்.
இந்த மருத்துவ காப்பீடு அட்டை பெற குடும்ப அட்டை, ஆண்டு வருமான சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் கொடுத்து புதிய காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இன்று நடைப்பெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் அதிகளவு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூட்டத்தை சரிசெய்து ஒழுங்கு படுத்தினார்.
இந்த முகாமில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், வட்டாட்சியர் குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment