விவசாய கிணற்றில் உள்ள கூட்டுரிமையை தடுத்து பயிருக்கு தண்ணீர் விடாமல் தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க எஸ் பி அலுவலகத்தில் புகார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 December 2023

விவசாய கிணற்றில் உள்ள கூட்டுரிமையை தடுத்து பயிருக்கு தண்ணீர் விடாமல் தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க எஸ் பி அலுவலகத்தில் புகார்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன இளைய நகரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் தினகரன் இவருக்கு சொந்தமாக கூட்டுரிமையில் விவசாய கிணறு உள்ளது.

இந்த நிலையில் தினகரனுக்கு தம்பியான நடராஜன் மற்றும் அவருடைய மகன்கள் ஆகியோர் கூட்டுரிமையில் உள்ள கிணற்றில் பயிருக்கு தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர், எனக்கூறி இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/