திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம், Walkhathon 2023, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் திரு. மரு. த. ரா. செந்தில். MBBS DPH MPH DIH தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் இரண்டாம் நிலை அலுவலர்கள், அனைத்து வட்டாரங்களைச் சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர்கள், பல்துறை அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள்,சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், Walker's Club Thiruppathur மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நடை பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி சாமடிவட்டம், ஆஞ்சநேயர் கோவில் வரை சென்று 8 கிமீ நிறைவு செய்யப்பட்டது, இறுதியில் ஆண்டியப்பனூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. கனகராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment