திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர்  பாரத ஸ்டேட் வங்கி முன்பு சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் ராமு மற்றும் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பழனி,  மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுநர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் Hit & Run என்னும் புதிய சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.


விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடமும் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசுகள் சாலை விதிகள் மற்றும் விபத்துகளை தவிர்ப்பது பற்றிய விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும்.


வாகனத்திற்கு லோடு ஏற்றும் மற்றும் இறக்கும் இடங்களில் ஓட்டுநர்கள் உண்டான சராசரி அடிப்படை வசதி,  உணவு,  குடிநீர், கழிப்பறை மற்றும் குளியலறை உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 


ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி தர வேண்டும். வெளி மாநிலங்களில் தமிழக வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் சிஎஸ்ஆர் மற்றும் முதல் தகவல் அறிக்கை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் அவல நிலை மாற்றப்பட வேண்டும்.


ஆதாரம் இல்லாமலும் ஓட்டுநர் ஒப்புதல் இல்லாமல் ஆன்லைனில் அடிக்கடி வழக்கு பதிவு செய்யப்படுகிறது இந்த வழக்கை தகுந்த  ஆதாரங்களோடு பொய் வழக்கு என்பது நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளை பாரபட்சம் இன்றி பணி நீக்கம் செய்ய புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/