திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் பகுதியில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், ஆகியவையகள் இயங்கி வருகின்றன, இதில் சார்பு நீதிமன்றம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத குறுகிய இடத்தில் உள்ளதாகவும் அதேபோல் வணிகவரித் துறைக்கு உரிய கட்டிடத்தில் உரிமையியல் நீதிமன்றமும் மேலும் குற்றவியல் நீதிமன்றம் 120 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது.
இதனால் மூன்று நீதிமன்றமும் வெவ்வேறு இடத்தில் உள்ளதால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கிற்காக வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதன் காரணமாக வாணியம்பாடியில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்திலேயே வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டுமென இன்று 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment