ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை சொந்த பணத்தை கொண்டு 4 லட்சம் மதிப்பீட்டில் சிசிவி.கேமரா பொருத்தப்பட்டதை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள சி சி வி கேமரா திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணா துரை சொந்த பணத்தை கொண்டு பொருத்தப்பட்டதை மக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஆவின் பால் வள தலைவர் எஸ் ஆர் ராஜேந்திரன் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் காவியா விக்ட்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment