திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கோலாட்டம் ஆடி 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 March 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கோலாட்டம் ஆடி 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மகளிர் திட்டத்தின் சார்பில்  100% வாக்களிப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து சீனிவாச பெருமாள் கிராமிய கலைக் குழுவினர்கள் கோலாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதேபோல் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் 100% வாக்களிக்க வேண்டும் என்ற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும், வாக்காளர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, எங்கள் வாக்கு எங்கள் உரிமை உள்ளிட்ட பதாகைகளை தூய நெஞ்ச கல்லூரி மாணவ மாணவிகள் ஏந்தி நின்றனர்.


மேலும் இந்த நிகழ்வில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் சதீஷ்குமார், மகளிர் திட்ட அலுவலர் பிரியா மகளிர் குழுவினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/