திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து நிலை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 7 March 2024

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து நிலை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து நிலை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய மாநில தழுவிய மாபெரும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி சம வேலைக்கு சமூக ஊதியம் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அனைவருக்கும் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

சங்க பாதுகாப்பு, பணி பாதுகாப்பு, ESI EPF பதவி உயர்வு,  வாரிசு வேலை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பாரத இயக்க வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊராட்சி சுகாதார ஊக்குனர்களுக்கு ஊதியம் வழங்கும் தேதி உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் ஊதியம் உரிய தேதியில் வழங்கப்பட வேண்டும். வெளி முகமை மூலம் ஊதியம் வழங்குவதை தடுத்து நிறுத்தி விரைய செலவுகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசாணை GO. 2 டி மற்றும் 62DT  இன் படி மாதம் ரூபாய் 18000 குறைந்தபட்ச சம்பளமாக வழங்க வேண்டும்.


தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் கேட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/