பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 April 2024

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


திருப்பத்தூர் மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும்,  வாக்காளர்களின் வீடுகளுக்கு விழிப்புணர்வு செய்தியுடன் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் பணியும்   மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. 


திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்று வந்த வாக்குச்சாவடிகளாக கருதப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்குமாறு வலியுறுத்தி அஞ்சல் அட்டை திருப்பத்தூர் மாவட்ட தபால் துறை சார்பில் தயார் செய்து அதனை அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் தபால் பெட்டியில் அஞ்சலட்டைகளை  செலுத்தி துவக்கி வைத்தார்.  


அதனைத் தொடர்ந்து வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் அனைத்து அஞ்சலக ஊழியர்களும் பொதுமக்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும் திருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் அஞ்சலக அலுவலர்களும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவறாமல் வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பிரியா, திருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், அஞ்சலக ஆய்வாளர்கள்,  அஞ்சலக அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad