திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம் சந்தேகம் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு பெரண்ட கத்தி கத்தி கதறிய உறவினர்கள்! மயக்கம் போட்டு விழுந்த குடும்பத்தினரால் பரபரப்பு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 27 April 2024

திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம் சந்தேகம் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டு பெரண்ட கத்தி கத்தி கதறிய உறவினர்கள்! மயக்கம் போட்டு விழுந்த குடும்பத்தினரால் பரபரப்பு!


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த மணி விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு மனைவி என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் மோகன் ஆகிய  இரு வாலிபர்கள் நேற்று இரவு மணியின் வீட்டை தட்டி தங்களுடைய ஆறாவது மகன் பழனிவேல் அளவுக்கு அதிகமான போதையில் அந்த குடிசையில் படுத்து கிடப்பதாக கூறி சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சென்று பார்த்த பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு  ஏதோ ஆகிவிட்டது என்று பதறிய பெற்றோர் பழனிவேலை திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தினர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.


இதுகுறித்து பழனிவேலின் தாயான செல்வி இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் சந்துரு மற்றும் மோகன் ஆகிய இரண்டு வாலிபர்களையும் சந்தேகத்தின் பேரில் கிராமிய போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மணி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனது மகன் சார்பில் சந்தேகம் இருப்பதாகவும் மேலும் உடனடியாக அந்த இரண்டு வாலிபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடிர் தர்ணாவில் ஈடுபட்டனர்.


அப்போது தனது பிள்ளை அடித்துக் கொன்று விட்டனர் எனக் கூறி உருண்டு பெரண்டு கத்தி கதறினார். இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு குறைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் இந்த நிலையில் திடீரென இறந்த பழனிவேலின்‌அக்காவான காமாட்சி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். பின்னர் திருப்பத்தூர் நகர போலீசாரின் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/