காய்கறி மார்க்கட்டில் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரச்சாரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 April 2024

காய்கறி மார்க்கட்டில் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரச்சாரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


தமிழ்நாட்டிலே முதல்முறையாக சக்தி நகர் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கட்டில் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரச்சாரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடியிருக்கக்கூடிய மருத்துவர் பசுபதியை ஆதரித்து பள்ளிகொண்டா கந்தனேரி பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று பொது பிரச்சாரத்தை மேற்கொண்டு நேற்று இரவு திருப்பத்தூரில்  உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார் 


அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் போட்டிடுகின்றார், அவரை ஆதரித்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் இன்று காலை 7மணி அளவில்  தமிழகத்தில் முதல் முறையாக தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி வியாபாரிகளிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார் மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கி கலியபெருமாளை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


மேலும் பெண்மணி ஒருவர் தமிழகத்திற்கு நீங்க கண்டிப்பாக முதல்வராக வரவேண்டும் நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என கூறினார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர் டி டி குமார் மற்றும் அதிமுக  முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/