இந்திய கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை வள்ளுவர் நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 April 2024

இந்திய கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை வள்ளுவர் நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை  திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் நகர பகுதிகளான  தூய நெஞ்சக்கல்லூரி, நகைக்கடை பஜார், கோட்டை தெரு, சின்ன கடை தெரு, ஹவுசிங் போர்டு,அவ்வைநகர், வள்ளுவர் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது புதுப்பேட்டை ரோடு பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது ஏழை மக்களை ஏமாற்றி பணக்கார மக்களுக்கு சலுகை பண்றது தான் மோடியோட வேலை. நம்ம முதலமைச்சர் எல்லா வரிப்பணத்தையும் திட்டத்தையும் ஏழை மக்களுக்கு செய்கிறார் இது நம்ம முதலமைச்சர் வேலை. ஆனால் மோடி ஏழை எளிய மக்களை கண்டு கொள்வதில்லை ஏழை எளிய மக்களிடம் பணத்தை புடுங்கி வரியாக போட்டு நம்ம சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.


எல்லாம் வரி கேஸ் விலை ஏறி போச்சு பெட்ரோல் டீசல் விலை ஏறிப்போச்சு அதேபோல 15 லட்சம்  மோடி போடுவேன் என்று சொன்னாறு போடவில்லை. இப்ப நகை விலை 54,000 ரூபாய் பவுனு காரணம் ஜிஎஸ்டி தான் அந்த பாட்டி அம்மா ரெண்டு மூக்குத்தி போட்டுனு இருக்குது இதுக்கு மேல எல்லாம் ரெண்டு மூக்குத்தி போட முடியாது. அடுத்த தடவை மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு மூக்குத்தி கூட போட முடியாது எல்லாம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போயிடும் 


கொலைகாரன் இந்த மோடி மக்கள்கிட்ட இருந்து வரி மேல வரி போட்டு பணக்காரங்களுக்கு கார்பெட் நிறுவனங்களுக்கு அம்பானி அதானிக்கு சலுகை பண்றதுதான் மோடியோட வேலை. இந்த பத்து வருடத்தில் ஏழை மக்களுக்கள் கிட்ட இருந்து வரியாக புடுங்கி  ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி பணக்காரர்களுக்கு சலுகை கொடுத்து இருக்கிறான் அந்த மோடி அதனால் தான் மோடி ஆட்சி தூக்கி எறிய தேர்தல் என பேசி வாக்கு சேகரித்தார்.


பின்னர் வள்ளுவர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்து பின்னர் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசி அவர்களிடம் கிரிக்கெட் விளையாடி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 36 வார்டுகளிலும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன்.  மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். முன்னாள் சேர்மன் அரசு. ஸ்ரீதர் திருப்பத்தூர் நகர ஒன்னாவது தேர்தல் பணி குழு சார்பாக குட்டி என்கின்ற சீனிவாசன். இ ஐயப்பன் நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் மற்றும் துணை அமைப்பாளர் தமிழ்மணி. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்   டி என் டி கே .சுபாஷ். மற்றும் டி சி கார்த்தி. டி மதன் நகர மன்ற உறுப்பினர். பிரேம்குமார். சுகுணா ரமேஷ். ரமணன். கோபி . நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன் மற்றும் துணை அமைப்பாளர் அரவிந்த்.சார்லஸ் நவீன் குமார். கைலாஷ் சதாசிவம்  சதீஷ்குமார்.36 வார்டு நகர மன்ற உறுப்பினர்கள்  மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad