பாஜகவையும் பாஜகவின் கள்ளக் கூட்டணி அதிமுகவையும் தோற்கடிக்க திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னனி நகரமைப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 April 2024

பாஜகவையும் பாஜகவின் கள்ளக் கூட்டணி அதிமுகவையும் தோற்கடிக்க திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னனி நகரமைப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியில் உள்ள புரட்சிகர இளைஞர் முன்னணி வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் அலுவலகத்தில் இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் சினேகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், கடந்த பத்து ஆண்டு கால பாஜக ஆட்சியின் மதவெறி மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் மோடியின் மீது கடும் வெறுப்பில் மக்கள் உள்ளனர் அந்த வெறுப்பை பொய் புரட்டுகள் மூலம் திசை திருப்பி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடும் வெறியோடு பாஜக தமிழகத்தில் சில உதவிகட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து பரப்புரை செய்து வருகிறது



இந்த நிலையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்தபோது எட்டிகூட பார்க்காத மோடி வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சித்த மோடி ஓட்டுக்காக மட்டும் தமிழகத்தில் இதுவரை ஏழு முறை வந்துள்ளார். மேலும் ஜனநாயக விரோத பாஜகவுக்கு எதிராகவும் பாஜகவை தோற்கடிக்கவும் இந்திய அளவில் இந்திய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகார மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் காரர்களை நிரப்பி மாநில கவர்னர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் 


அரசியல் சாசனத்தில் அமைக்கப்பட்டுள்ள சுயேட்சை அமைப்புகளான  தேர்தல் ஆணையம் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, போன்றவை RSS பாஜகவின் கை கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன.


ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே போலீஸ், ஒரே தேர்தல், ஒரே வரி, என எல்லா அதிகாரங்களும் ஒன்றிய அரசின் கையில் குவித்து வருகிறது. மாநில அரசுகளின் அதிக கரங்களை பறித்து எல்லாவற்றிற்கும் மாநிலங்கள் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறித்து எல்லாவற்றிற்கும் மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என பேசினார்.



மேலும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன், நகர குழு உறுப்பினர்கள் குரிசில் மணி, உதயகுமார், மணிமொழி, கந்திலி ஒன்றிய அமைப்பாளர் நாகராஜ், உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad