கந்திலி அடுத்த குருமன்குட்டை பகுதியில் காலகாலமாக பயன்படுத்தி வந்த பாதையில் பள்ளம் தோண்டியததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 May 2024

கந்திலி அடுத்த குருமன்குட்டை பகுதியில் காலகாலமாக பயன்படுத்தி வந்த பாதையில் பள்ளம் தோண்டியததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்*

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த குருமன்குட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் காலம்காலமாக பயன்படுத்திய மண்சாலை உள்ளது. 


மேலும் சந்திரகிரி வட்டம் நாரியூர், பாட்டக்காரன் வட்டம், ஏழுமலை கொள்ளையான் வட்டம், உள்ளிட்ட பகுதி மக்களும் இந்த மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலையை அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் மணி என்பவர் சாலையின் குறுக்கே கல்லை போட்டு தடுக்கிறார்.  


அதனால் ஆத்திரமடைந்த முத்து மகன் மாது மண் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியதாக தெரிகிறது. அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என பள்ளம் தோண்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக பெங்களூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

அப்போது திடீரென தார்சாலையில் படுத்து நூதன முறையில் மறியல் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/