திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் பகுதியை சார்ந்த திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த அனுமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி (35) இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி உயிரிழந்த நிலையில் நான்கு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஐந்தாவதாக திருப்பத்தூர் அருகே ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் கடத்திச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவருடைய தந்தை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment