திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பி. வீரப்பள்ளி பகுதியில் ஜூன் 22 தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜோலார்பேட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர் ரவிநாத் தலைமையில் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
இதில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரன் மாற்றுத்திறனாளியான இவருக்கு ஒரு லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ந அன்பளிப்பாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர், அருள், ஏழுமலை, உதய பாரதி, மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை .
No comments:
Post a Comment