திருப்பத்தூரில் சில தினங்களுக்கு முன்பு சிறுத்தையால் தாக்கப்பட்ட முதியவருக்கு விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் 55 ஆயிரம் நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 June 2024

திருப்பத்தூரில் சில தினங்களுக்கு முன்பு சிறுத்தையால் தாக்கப்பட்ட முதியவருக்கு விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் 55 ஆயிரம் நிவாரணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்*

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர மையப்பகுதி சாம நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர்.


அப்போது ஜோலார்பேட்டை அடுத்த புத்தாகரம் ஊராட்சியில் வசிக்கும் கோபால் (70) என்கிற முதியவர் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெயிண்டர் வேலை செய்து கொண்டிருந்த போது பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை அவரை தாக்கியதில் காது மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 28 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில் தனக்கு வயது மூப்பு காரணமாகவும் இவரது 2 பிள்ளைகள் இவரை கவனிக்காமல் விட்டு விட்டதாலும் சிறுத்தையின் தாக்கத்தினால் உடல் ஒத்துழைக்காத சூழ்நிலையில் தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.


இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வனத்துறை அலுவலர்களிடம் முதியவரின் மனுவை பரிந்துரை செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சிறுத்தையால் தாக்கப்பட்ட கோபாலுக்கு 55 ஆயிரம் வழங்கினார். 


மேலும் குறைத்தீர்வு கூட்டத்தின் பேசிய சமூக ஆர்வலர் அசோகன் என்பவர் ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக கூறியுள்ளார் இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி குற்றம் எனவும் பேசினார். 


அதேபோல மற்றொரு விவசாயி ஒருவர் திருப்பதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் அமோகமாக விற்கப்படுகிறது என கூறும் போது இது விவசாய குறை தீர்வு கூட்டம் தங்களுக்கு விவசாயத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் கூறுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வேளாண்மை துறை இணை இயக்குனர் கண்ணகி, தோட்டக்கலைத் துணை இயக்குனர் தீபா மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/