திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்-2008ல் அமைக்கப்பட்டது.
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கினைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் (GDP HALL) 21-06-2024 அன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெறும் திருநங்கைகளுக்கான இச்சிறப்பு முகாமில் பயனடையாத திருநங்கைகள் மேற்காணும் நலத்திட்ட உதவிகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டு பயணடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment