தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகியை கண்டித்து திருப்பத்தூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். பத்திரிக்கையாளர்களை தாக்கும் மற்றும் அச்சுறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் முனீர்பீரான், அருண்குமார், பிஆர்ஓ தினேஷ்குமார், அல்லாவுதீன், ஆஞ்சி, அஸ்லாம், கணேசன், மற்றும் வழக்கறிஞர் தங்கபாண்டியன் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் கேசவன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment