திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலுர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜா. இவர் வாகன தணிக்கையின் போது காவல் நிலையம் பகுதியில் அடிக்கடி சுற்றி வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படை பிடித்து அவனுடைய கைரேகை பதிவு குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பின்னர் விசாரணையில் அந்த நபர் மும்பையில் ஒரு வீட்டில் திருடிய குற்றவாளி என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து குற்றவாளி கண்டுபிடிக்க திறமையாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டி சான்றிதழ் வழங்கி வெகுமதி வழங்கினார்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment