திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள ஓசை தொண்டு நிறுவன அலுவலகத்தில் ஓசை தொண்டு நிறுவன தலைவர் சி.விஜி ஏற்பாட்டில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் பல்வேறு சங்கங்கள் ஒருங்கிணைந்து தென்பெண்ணை பாலாறு இணைப்பு குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இயற்கை உணவு உற்பத்தியாளர் சங்கம், திருப்பத்தூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, கோர் தொண்டு நிறுவனம், மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கலந்துகொண்டு இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் முக்கிய தீர்மானங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கறைகளை சுத்தப்படுத்துதல், ஏரிகளின் கறைகளை பலப்படுத்தி இயற்கை பூங்கா அமைத்தல், தரிசு நிலங்களை வேளான் காடாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டது.
இதில் கோர் தொண்டு நிறுவன தலைவர் அருள், திருப்பத்தூர் இயற்கை விவசாய கூட்டமைப்பு தலைவர் அச்சுதானந்தன் மற்றும் செயலாளர் இமயவர்மன், மதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment