ஆதிசக்தி நகரில் குப்பைகளை அகற்றாத ஊராட்சி நிர்வாகம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வீட்டில் சேகரித்த குப்பைகளை காரில் கொண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

ஆதிசக்தி நகரில் குப்பைகளை அகற்றாத ஊராட்சி நிர்வாகம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வீட்டில் சேகரித்த குப்பைகளை காரில் கொண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்!.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி ஆதிசக்தி நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரத் (32) என்ற இளைஞர் தங்கள் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது இதனை சுத்தம் செய்ய வேண்டும் என கவுன்சிலர் உட்பட ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்துள்ளார். 

ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது இதன் காரணமாக ஆத்திரமடைந்த சரத் தனது செல்போனில் குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அதன் பின்பு தனது வீட்டில் சேகரித்த குப்பைகளை கேரி பேக்கில் கட்டி தனது காரில் வைத்துக்கொண்டு ஆதியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு கொண்டு சென்று அலுவலகத்தின் நடுவில்  வைத்துள்ளார். இதனால் திகைத்துப் போன ஊழியர்கள் உடனடியாக சரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


பின்னர் அதனையும் அவர் வீடியோவாக பதிவு செய்தார் அதன் பின்னர் இன்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆதிசக்தி நகரில் கொட்டப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்தனர். இதனையும் வீடியோவாக பதிவு செய்தார், ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றாத காரணத்தினால் தானே களத்தில் இறங்கி நூதனமான முறையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைந்து குப்பைகளை வைத்தும் ஆதிசக்தி நகர் பகுதியில் உள்ள  குப்பையை அகற்ற செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- மாவட்ட  செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/