திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 796 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 31,493 மாணவ மாணவியர்களுக்கு. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 30 ஆயிரத்து 725 மாணவ மாணவியர்களுக்கும் விலையில்லா சீருடைகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக ஒரு செட் சீருடை தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது இவை அனைத்தும் நேற்றிலிருந்து வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி ஒரு மாணவருக்கு நான்கு செட் சீருடை வழங்கப்பட உள்ளது மீதமுள்ள மூன்று செட் சிறுவடைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சுமதி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
- மாவட்ட செய்தியாளர். மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment