திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை அடுத்த சிவசக்தி மஹால் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், புதுக்கோட்டை, பால்னங்குப்பம் வெங்காயபள்ளி, கருப்பனூர், அண்ணாண்டப்பட்டி, உள்ளிட்ட உள்ளிட்ட கிராம மக்களுக்கு கலந்து கொண்டனர், இந்த முகாமில் மின் இணைப்பு, பட்டமாறுதல், பட்டா விண்ணப்பித்தல், பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை விதவை சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு உணவு மற்றும் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட15 துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமும் மனுக்கள் பெறப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பொதுமக்களுக்கு பட்டா வழங்கினார்.
இந்த முகாமில், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் சுபாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள், குப்புசாமி, ராமானுஜம், பன்னீர்செல்வம், தேன்மொழி, மனோகரன், சுரேஷ், திமுக திருப்பத்தூர் மேற்கு துணை ஒன்றிய செயலாளர் அரசு, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை .
No comments:
Post a Comment