திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நத்தம் பஞ்சாயத்தில் வசித்து வரும் அருண்குமார் லலிதா என்ற தம்பதிகளிடம் நூதன முறையில் மோசடி கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் வசித்து வரும் அருண்குமார் லலிதா என்ற தம்பதியிடம் இருந்து அவர்கள் வைத்திருந்த பிக்கப் வாகனத்தை வாடகைக்கு பெற்றுக் கொள்வது போல பெற்றுக்கொண்டு மாதம் 20 ஆயிரம் வாடகை தருவதாக கூறியும் முன்பணமாக 2 மாத வாடகை ரூபாய் 40 ஆயிரத்தை வழங்கிவிட்டு, பின்னர் மாத வாடகை கொடுக்காமல் அடைக்கலைத்து வந்தும் அவர்களை தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்த அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் வேலு மற்றும் வெங்கடேசன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மனவிரத்தில் இருந்த அருண்குமார் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருது உட்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.
அருண்குமார் லலிதா தம்பதிகள் இருவரும் வேலு மற்றும் வெங்கடேசன் ஆக இருவரையும் பல நாட்கள் தேடி வந்துள்ளனர் இந்நிலையில் வேலு என்பவரைத் ஊர் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் உறவினர்கள் ஆகியோர் கண்டுபிடித்து அவரை இன்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர் இந்நிலையில் சமரசமாகாத தம்பதியின் உறவினர்கள் திடீரென நத்தம் கூட் ரோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் அவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார், கலந்தும் கலந்து சென்றனர், அருண்குமார் லலிதா தம்பதி தன் வாகனத்தை மீட்டு தருமாறு காவல்துறை மனுவை ஒன்று அளித்துள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
No comments:
Post a Comment