திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தார பள்ளி பகுதியை சேர்ந்த முனிசாமி இவருக்கு சாமுண்டி சாமியார் மற்றும் ராஜா என இரு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் சாமுண்டி சாமியார் 1988 அரசுக்கு சொந்தமான இடத்தில் தன்னுடைய சொந்த செலவில் வெற்றிவேல் முருகன் கோவில் மற்றும் நாடக மேடை மற்றும் இரண்டு கடைகளை கட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த கோவிலின் வாரிசுதாரர்களாக சாமுடி சாமியார் அவருடைய அண்ணனான ராஜா மற்றும் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளுக்கு உயில் கொடுத்துள்ளார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சாமுண்டி சாமியார் உயிரிழந்த நிலையில் கோவில் நிர்வாகத்தை அவர்களுடைய வாரிசுதாரர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலின் அருகில் தான் பரம்பரை பரம்பரையாக கோவிலின் வாரிசுதாரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரிசுதாரர்கள் வண்ணார் சமூகத்தைச் சார்ந்ததால் இங்கே இருக்கக் கூடாது என சிலர் அவர்களை தொந்தரவு செய்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு முன்பு தொந்தரவு செய்யும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் அந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், ரவி, உள்ளிட்ட சிலர் திடீரென கோவிலில் அத்துமீறி கோவிலில் இருந்த மின்சார இணைப்புகளையும் துண்டித்துள்ளனர் மேலும் நாடக மேடையையும் அதேபோல் இரண்டு கடைகளையும் அடித்து துவம்சம் செய்து உள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜ குடும்பத்தினர் புகார் அளித்தனர் மேலும் அதன் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் இதனால் இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது நாட்றம்பள்ளி போலீசார் இதற்கு முன்பே புகார் அளித்துள்ளீர்கள் நேற்று எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளீர்கள் எத்தனை முறை தான் புகார் அளிப்பீங்க! திரும்பவும் இன்று இங்கு வந்து உள்ளீர்கள் அங்கேயே நில்லுங்கள் திரும்பவும் நாளை வாங்க என்று கூறியுள்ளனர்.
இதன் காரணமாக போலீசாருக்கும் ராஜா குடும்பத்தினருக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெளியே நிற்க வைத்து அவர்களிடமிருந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் குடும்பத்துடன் தற்கொலை கொள்வதை தவிர வேறு வழியில்லை என ஆதங்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment