திருப்பத்தூரில் புதிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மத்திய அரசு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் தேவகுமார் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக வழக்கறிஞர்கள் அன்பழகன், மாது, மணி, ஆனந்தகுமார், கே.பி.பழனிசாமி, சத்தியமூர்த்தி, கே.என்.சரவணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணா மலை.
No comments:
Post a Comment