தகவலின் பேரில் தனியார் விடுதியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது விடுதியில் தனி அறை எடுத்து இரவு பகலாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்த செல்வா, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி, சலாவுதீன் நகர் பகுதியை சேர்ந்த முபாரக், வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்த வேந்தன், லட்சுமணன், தபீஷா, சசிகுமார் மற்றும் தர்மபுரி பென்னாகரம் பகுதியை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரோக்கத்தை பறிமுதல் செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி ராமையன் தோப்பு, நேதாஜி நகர் மற்றும் ஆம்பூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள தனியார் விடுதிகளில் தொடர்ந்து கூலித் தொழிலாளர்களை சுரண்டும் வகையில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை போலீசார் முற்றிலும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை
No comments:
Post a Comment