திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு பிரசித்தி பெற்ற முருகர் கோயில் உள்ளது. இந்த நிலையில் தினம்தோறும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், முருகப்பெருமானை தரிசிப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறையின் காரணமாக தொடர் விடுமுறை ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 2 நாட்களாக கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து செல்கின்றனர்.
மேலும் அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அதன் அருகே உள்ள முருகர், பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் இன்று ஜலுகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
No comments:
Post a Comment