திருப்பத்தூர் மாவட்ட ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண் செயலாளர்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 November 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண் செயலாளர்!


திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், ஆதியூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (சி 2502) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 6000 மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இந்த சங்கத்தின் செயலாளராக ஆதியூர் கிராமத்தை சார்ந்த (திருமதி. C. சித்ரா) என்பவர்  என்பவர் இருந்து வருகிறார். சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பாக சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்து படிப்படியாக தற்பொழுது அந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். 

ஆரம்பத்தில் மக்கள் பணியே மகேசன் பணி என்று செய்து வந்த தற்போதைய செயலாளர் திருமதி.C. சித்ரா சங்கத்தின் இயக்குனர்கள், தலைவர்கள் தன்னுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்த காரணத்தினால், பணியாளர்களிடையே தன்னுடைய அதிகார கோர முகத்தை காட்டத் தொடங்கி இருக்கிறார். வேலைக்கு வராமலேயே இரண்டு நாள் மூன்று நாள் கழித்து வருகை பதிவேட்டில் கையெழுத்து இடுவது, கடன் வழங்குவதில் யார் அதிகமாக லஞ்சம் தருகிறார்களோ அவர்களுக்கு கடன் தருவது, நூற்றுக்கணக்கான மகளிர் குழுக்கள் இருந்தாலும் தனக்கு பிடித்தமான மகளிர் குழுக்களுக்கு மட்டுமே கடன் வழங்குவது, மற்ற குழுக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வது, பட்டியல் சமூக மக்கள் கூட்டுறவு சங்க விவரங்களை தெரிந்து கொள்வதற்காக உள்ளே வந்தால் சம்பந்தமே இல்லாமல் சாதி ரீதியாக இழிவு படுத்துவது, தினந்தோறும் தொடர்கதையாக இருந்து வருகிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக உடல் ஊனமுற்ற பட்டியல் சமூகத்தைச் சார்ந்த விஜயகுமார் என்பவர் கணினி பதிவாளராக பணியாற்றி வந்தார். பட்டியல் சமூகம் என்று தெரிந்த பிறகு அவரை தினந்தோறும் உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி,அந்த உடல் ஊனமுற்ற பணியாளரை நிறுத்திவிட்டார். இப்பொழுதும் அவர்களின் குடும்பம் ஒருவேளை சோற்றுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து மூன்று முறை பணி மாறுதல் செய்தும், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணி செய்யாமல், மீண்டும் ஆதியூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலேயே 27 ஆண்டுகளாக பணி செய்து வருவது ஒரு உதாரணமாகும். தன்னுடைய பணபலம் & அரசியல் பலம், பெண் என்ற அனுதாபங்கள் இதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களை, ஜெர்மனியில் ஹிட்லர் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இருந்தபோது இனவெறி காரணமாக யூதர்களை விஷவாயு வைத்துக் கொள்வது, கடும் சித்திரவதை செய்வது, கண்களை பிடுங்குவது, இப்படி கொடூர தண்டனைகளை வழங்கி ரசித்து பல லட்சம் மக்களை கொன்றானோ, அதேபோல, ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்களுக்கு தண்டனை வழங்குவது இவரின் தனி சிறப்பு.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒருவர் நீதிபதி என்று விளம்பரப்படுத்தி அதற்காகவே, ஒரு தனி நீதிமன்றத்தையே உருவாக்கி வழக்குகள் நடப்பதை போல் ஜோடித்து பலநூறு வழக்குகள் தீர்ப்புகள் வழங்கி, பல கோடிகள் சுருட்டி, நீதித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் போல, தன்னை மாவட்ட கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஆகவே நினைத்து செயல்பட்டு வருகிறார். இப்படி சாதி ரீதியாக நடந்து கொள்வதால், பல நூறு விவசாயிகள் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அதையும் மீறி கொஞ்சம் படித்தவர்கள் செயலாளரை கேள்வி கேட்டால், நீ எங்க வேண்டுமானாலும் போய் சொல்! கலெக்டர்கிட்ட போறியா? இல்ல எம்எல்ஏ  கிட்ட போறியா? இல்ல எம்பி கிட்ட போறியா? நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர்களை மிரட்டி அனுப்பி விடுகிறார். இப்படி ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரு தனிநபராக நிர்வாகம் நடத்தி வரும் திருமதி. C சித்ரா அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமா? என்று ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உறுப்பினர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர் ராதாகிருட்டிணன் அவர்கள் வேதனையாக கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/