மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும் என்று கண்டன உரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி தலைவி நிர்மலா ராசா மற்றும பொன்னுசாமி.குட்டிமணி. ஜோலார்பேட்டை நகர செயலாளர். ஞானமோகன் மற்றும் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன் மற்றும் பாமாக மாவட்ட மாணவர் அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வன்னிச்சங்கம் பாமக கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை.
No comments:
Post a Comment