திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை கலைத் திருவிழா சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு 2024-2025 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி சசிகலாசூரியகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரன், இருபால் ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் அனிதா ஜெகதீஸ்குமார், அமுதாஇளங்கோ, மஞ்சுளா முனிகிருஷ்ணன், பிரேமா கருணாநிதி, லட்சுமி தேவராஜ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment